குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறமாட்டோம் - அதிமுக தேர்தல் அறிக்கைக்கு எதிராக நிற்கும் பாஜக

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறமாட்டோம் - அதிமுக தேர்தல் அறிக்கைக்கு எதிராக நிற்கும் பாஜக

சி.டி.ரவி - முதல்வர் பழனிசாமி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறமாட்டோம் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    பாமக, பாஜக ஆகிய அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அதேபோல் இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்த அதிமுக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, 6 இலவச சிலிண்டர்கள் இலவசம், அம்மா வாஷிங்மெஷின் வழங்குதல், மாநகர பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு 50% சலுகை உள்ளிட்ட மக்களை கவரும் திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

    அதேபோல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிஏஏவை ஆதரித்து வாக்களித்த அதிமுக தற்போது திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என்று அறிவித்திருப்பது குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறமாட்டோம். அதிமுக தேர்தல் அறிக்கையில் அவ்வாறு தெரிவித்திருப்பது பற்றி அக்கட்சியுடன் பேசுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



    திமுக தேர்தல் அறிக்கையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் சி.டி.ரவி, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சி தொடர்ந்து சிஏஏவுக்கு எதிராக போராடும் என்று தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை மு.க.ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார். திமுக தலைவர் உள்ளிட்ட வேறு எவரும் சிஏஏவை எதிர்க்கலாம். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published: