சிவகங்கையில் நேருக்கு நேர் சந்தித்த அதிமுக, அமமுக வேட்பாளர்கள் தம்பி என்னப்பா என்று அதிமுக வேட்பாளர் கேட்க, பதிலுக்கு அண்ணா என்று கூறி இருவரும் சிறு புன்கையுடன் சென்றனர்.
சிவகங்கையில் நேற்று அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தபோது, தீடிரென எதிர் பாராமல் இருவரும் நேர்க்கு நேர் சந்தித்து பரஸ்பரம் அன்பாக பேசிக் கொண்டது சிறந்த அரசியல்வாதி என்ற பண்பை காட்டியது.
நேற்று காலை, சிவகங்கை கோட்டசியர் அலுவலகத்தில் அமமுக சார்பில் அன்பரசன் மனு தாக்கல் செய்ய வந்தர். அப்போது தேர்தல் அலுவலரிடம் மனுக்களை வழங்கி விட்டு அறையில் இருந்து வெளியே வரும் போது, உள்ளே வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக மாவட்ட செயலாளரும் ,சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளருமான செந்தில் நாதன் தீடீரென உள்ளே வந்தர், அமமுக வேட்பாளர் அன்பரசன் வேட்பு மனு முடித்து வெளியே கதவை திறந்து வரும் போது எதிர் எதிரே வந்தனர். அப்போது செந்தில் நாதன தம்பி என்னப்பா என்றார், அதற்க்கு அமமுக வேட்பாளர் அனபரசன் சிறு புன்னகையுடன் அண்ணா என்று வணக்கம் வைத்து சென்றார்.
Must Read : ஓபிஎஸ் மகன் காலில் விழுந்த மாணிக்கம் எம்.எல்.ஏ. : வேட்புமனு தாக்கலின் போது நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்
என்னதான் இருந்தாலும் எல்லோரும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தாலும் தற்போது அமமுகவும் அதிமுகவும் எதிர் எதிராக இருந்து வரும் நிலையில், இருவரும் பரஸ்பரம் அன்பை பரிமாற்றி கொண்டு சிறந்த அரசியல்வாதிகளாக இருவரும் காட்டி கொண்டனர்.