TASMAC : ‘டாஸ்மாக் திறப்பது மனிதாபிமானமற்ற செயல்...’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பதிலடி

டாஸ்மாக் கடை

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என தெரிந்தும், கொரோனா பரவியதில் டாஸ்மாக்-க்கு பெரும்பங்குண்டு என தெரிந்தும், டாஸ்மாக் திறப்பது மனிதாபிமானமற்ற செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து வந்தது.

இந்நிலையில், மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பித்தபோது, மதுக்கடைககள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, மதுக்கடைகளை திறக்க அப்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அப்போது மதுக்கடையைத் திறக்க திமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், “ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என தெரிந்தும், கொரோனா பரவியதில் டாஸ்மாக்-க்கு பெரும்பங்குண்டு என தெரிந்தும், டாஸ்மாக் திறப்பது மனிதாபிமானமற்ற செயல் என தெரிந்தும், இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்திருப்பது யார் குடியை கெடுக்க? என்று அதிமுக ட்விட்டரில் பதிவிட்ப்பட்டுள்ளது. அந்த ட்வீட்டில், ‘குடிகெடுக்கும் ஸ்டாலின்’ என்ற வாசகமும் சேர்க்கப்பட்டுள்ளது.

 



கடந்த ஆண்டு அதிமுக அரசு டாஸ்மாக்கை திறக்க அனுமதி அளித்திருந்தபோது, 2020 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவியதில் டாஸ்மாக்-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!” என்று குறிப்பிட்டிருந்தார்.

Must Read : திருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை - வனத்துறையினர் நடவடிக்கை

இந்நிலையில், அந்த ட்வீட்டை தற்போது டேக் செய்துள்ள அதிமுக, அதே வாசகத்தைக் கொண்டு ட்வீட்டை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: