திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.. ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

அதிமுகவினர் போராட்டம்

அதிமுகவினர் அவரவர் வீட்டு வாயிலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள்.

 • Share this:
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக, அதிமுக சார்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையினான அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இந்நிலையில், தேர்தல் வெற்றிக்காக வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரவர் வீட்டு வாயிலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி காலை 10 மணியளவில் இந்த போராட்டம் தொடங்கியது.  Must Read : பெகாசஸ் மென்பொருள் மூலம் சீமான் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதா?

  இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள தமது இல்லம் எதிரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இதேபோல, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் போடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  பதாகை வாசகங்கள்:

  1.விடியல்கார அண்ணாச்சி டீசல் விலை என்னாச்சு?

  பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தது திமுக, ஆனால் ஆட்சி அமைந்த பிறகு விலை 10 ரூபாய் உயர்ந்து விட்டது.
  இது மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் இல்லையா?

  2. கொரோனா நோய்க்கு சிகிச்சை கொடு, உண்மையை சொல்ல பயிற்சி எடு

  கொரோனா நோய் தொற்று பாதிப்பில் மரணங்கள் மறைக்கப்படுகிறது. மருத்துவ வசதிகள் மறுக்கப்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.  3. சொன்னதை செய் திமுக - வே தமிழக மாணவர்களை ஏமாற்றாதே

  நீட் தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால், தமிழக மாணவச் செல்வங்களை ஏமாற்றும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்யாததை கண்டிக்கிறோம்.

  4. மேகதாதுவில் அணையா இனி காவிரி தண்ணீர் கனவா?

  மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழ் நாட்டை பாலைவனமாக மாற்ற போகிறதா கர்நாடக அரசு? அணை கட்டுவதை தமிழக அரசு உடனே தடுக்க வேண்டும்.

  இதேபோல தமிழகம் முழுவதிலும் அதிமுக தொண்டர்கள் திமுக அரசுக்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
  Published by:Suresh V
  First published: