கறுப்பர் கூட்டம் சர்ச்சை - பாஜக vs அதிமுக

கறுப்பர் கூட்டம் சர்ச்சை விவகாரத்தை பாஜகவினர் தேவையில்லாமல் பெரிதுபடுத்தி விட்டதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதனை பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் மறுத்துள்ளார்.

கறுப்பர் கூட்டம் சர்ச்சை - பாஜக vs அதிமுக
பொன்னையன் | வானதி
  • Share this:
கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இழிவுபடுத்தி வீடியோ பதிவிட்ட விவகாரத்தில் அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கந்த சஷ்டி அவமதிப்பு விவகாரத்தில் ஆதாரத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். பாஜகவினர் உள்நோக்கத்துடன் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

Also read... ஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான ’இ-பாஸ்’


அதேநேரம், கந்த சஷ்டி அவமதிப்பு சம்பவத்தை பாஜக தேவையில்லாமல் பெரிதுபடுத்தவில்லை என்று பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.இந்து வாக்கு வங்கியை அதிகரிக்க கந்த சஷ்டி விவகாரத்தை பாஜக பெரிதுபடுத்த முயற்சிக்கலாம் என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்துள்ளார்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading