Home /News /tamil-nadu /

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் மனு..

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் மனு..

Youtube Video

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபி-யிடம் அதிமுக அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் உள்ளிட்டோர் நேரில் புகார் அளித்தனர்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலையான நிலையில், கொரோனா தொற்று காரணமாக பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் தனியார் விடுதிக்கு சென்றார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிராக அதிமுக அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டிஜிபி திரிபாதியிடம் நேரில் புகார் மனு அளித்தனர்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, சசிகலா இனி அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக புகார் அளித்ததாகக் கூறினார். மேலும், சசிகலா அதிமுக கட்சியிலே கிடையாது என்பதால், கட்சி கொடியை பயன்படுத்த தார்மீக உரிமை கிடையாது என்றும் கே.பி முனுசாமி விளக்கமளித்தார்.

    அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி சண்முகம், சசிகலா இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரியதை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார். எனவே, சசிகலா இனி இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோர வேண்டும் என்றால் ஐ.நா சபையில் தான் முறையிட வேண்டும் என்றும் கூறினார்.

    அதேநேரம், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது தொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க... Petrol-Diesel Price | உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

    இதற்கிடையே, பெங்களூருவில் இருந்து சசிகலா வரும் 8-ம் தேதி தமிழகம் திரும்புவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சுய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு சசிகலா தமிழகம் திரும்பும் நாளை திருவிழா போல் கொண்டாட தொண்டர்கள் தயாராகி வருவதாகவும், தமிழக மக்களும் சசிகலாவை வரவேற்க தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    Must read: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி சசிகலாவை வரவேற்க திட்டம்

    மேலும் ஒரு தாய் பிள்ளைகளாக அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தை தலையெடுக்காமல் செய்வோம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.





    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: ADMK, Sasikala

    அடுத்த செய்தி