Home /News /tamil-nadu /

அதிமுக அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் விரட்டியடிப்பு!

அதிமுக அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் விரட்டியடிப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். எனினும், வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் விரட்டியடிக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், அதிமுக அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 1-தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன் அடிப்படையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும், முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் ஆகும். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில், சென்னை ஓட்டேரியை சேர்ந்த அதிமுக தொண்டர் ஓம்பொடி பிரசாத் சிங் என்பவர் நேற்று ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு பெற வந்தார். எனினும், அவருக்கு வேட்புமனு வழங்கப்படவில்லை. மேலும், சிலர் அவரை அடித்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: கிரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு!


    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட   ஓம்பொடி பிரசாத் சிங் கூறுகையில், அதிமுகவில் நான் நீண்டகாலத் தொண்டன். ஜனநாயக முறைப்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விரும்பினேன். அதற்காக வேட்புமனு பெற வந்தபோது, தராமல் தாக்கிவிட்டனர் என்று தெரிவித்தார்.

    இதேபோல், இன்று  இந்த பதவிகளுக்குப் போட்டியிட  5க்கும் மேற்பட்டோர் முன் வந்தனர். எனினும், அவர்கள் வேட்புமனு பெற முடியாத நிலை ஏற்பட்டது. அங்கிருந்த நிர்வாகிகள் சிலர் வேட்புமனு பெற வந்தவர்களை தாக்கி வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

    மேலும் படிங்க: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை மறைமுகமாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி

    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, AIADMK

    அடுத்த செய்தி