Home /News /tamil-nadu /

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு : ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி உயர் நீதிமன்றத்தில் தகவல்

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு : ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி உயர் நீதிமன்றத்தில் தகவல்

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த சம்பவம் தொடர்பான 3 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்று இருப்பதாக டி.ஜி.பி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ அல்லது வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற கோரி முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த சம்பவம் தொடர்பான 3 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்று இருப்பதாக டி.ஜி.பி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி,  விசாரணை துரிதப்படுத்தும்படி  சி.பி.சி.ஐ.டி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டி.ஜி.பி-க்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதல் மனுவை  தாக்கல் செய்திருந்தார்.

ALSO READ |  தஞ்சாவூரில் நாட்டு மீன்கள் உற்பத்தியை அதிகரிக்க ஆட்சியர் நடவடிக்கை
 இந்த மனு  நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது,  காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 7ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நிலை குறித்து செப்டம்பர் 19ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை விரைவாக  முடிக்க அறிவுறுத்திய நீதிபதி, விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, சி.வி.சண்முகத்தின் மனுக்களை  19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: AIADMK, Chennai High court, High court

அடுத்த செய்தி