Home /News /tamil-nadu /

அதிமுக தலைமை அலுலவலகத்தை கைப்பற்றிய ஓபிஎஸ்... கதவை உடைத்து உள்ளே நுழைந்த ஆதரவாளர்கள் (வீடியோ)

அதிமுக தலைமை அலுலவலகத்தை கைப்பற்றிய ஓபிஎஸ்... கதவை உடைத்து உள்ளே நுழைந்த ஆதரவாளர்கள் (வீடியோ)

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

AIADMK Office : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுலவலகத்தின் கதவை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்த நிலையில், அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் அறைக்கு செ ந்றார் ஓ.பன்னீர்செல்வம்

    அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கினர்.

    இன்று காலை 9.15 மணியளவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்க இருந்த நிலையில், 9 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டார்.

    அப்போது, அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இரு தரப்பினரும் எதிர் எதிரே நின்று கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கார் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    அங்கே இரு தரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்ட  நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்தும், ஆக்ரோஷமாக கதவை உதைத்தும், மோதியும் உடைத்து உள்ளே புகுந்தனர். அதனைத் தொடர்ந்து, ஓபிஸ் தலைமை அலுவலகத்தில் நுழைந்தார்.

    அங்கே கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர்.



    இதனால், அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படங்கள் கிழித்து, தீவைத்து எரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    Must Read : ஊழல் புகார்... இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

    இந்நிலையில், வானகரத்தில் நடந்து வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, EPS, OPS

    அடுத்த செய்தி