முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வேட்பாளரை வாபஸ் பெற்றது ஓபிஎஸ் அணி... இபிஎஸ் வசமாகிறதா இரட்டை இலை..?

வேட்பாளரை வாபஸ் பெற்றது ஓபிஎஸ் அணி... இபிஎஸ் வசமாகிறதா இரட்டை இலை..?

மாதிரி படம்

மாதிரி படம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் அணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செந்தில் முருகனையும் வேட்பாளர்களாக அறிவித்தனர். இதனால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் ஓபிஎஸ் ஆகியோரை உள்ளடக்கிய பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து, தென்னரசுவை வேட்பாளராக ஏற்பது தொடர்பாக பதிலளிக்க ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கடிதம் அனுப்பினார். இது ஒருதலைபட்சமானது என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். எனினும், பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க தமிழ் மகன் உசேன் டெல்லி சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தலைமையில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பு, “இரட்டை இலை சின்னத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்பதற்காக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களது அணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் செந்தில்முருகனை வாபஸ் பெறுகிறோம். இரட்டை இலை சின்னம் முடங்கக்கூடாது என்பதால் வாபஸ் பெறுகிறோம்.  இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பரப்புரை மேற்கொள்வோம்” என்று கூறினார்.

இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரிக்க ஓபிஎஸ்ஸுக்கு கோரிக்கை வைத்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த நிலையில் தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது ஓபிஎஸ் தரப்பு. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவுள்ளது.

First published:

Tags: AIADMK, Edappadi Palaniswami, O Panneerselvam