அதிமுகவின் அடுத்தகட்ட வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக இன்று மீண்டும் ஆலோசனை...

அதிமுகவின் அடுத்தகட்ட வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக இன்று மீண்டும் ஆலோசனை...

அஇஅதிமுக அலுவலகம்

அதிமுக சார்பில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கை தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.

 • Share this:
  அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ். ஆகியோர் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக தற்போது பாமக,பாஜகவுடன் தொகுதிகள் ஒதுக்கீட்டை முடித்துவிட்ட நிலையில், தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறது.

  இந்நிலையில் அதிமுக பேட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை இன்று இறுதி செய்கிறது. நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணிகளில் தீவிரம் காட்டுகிறது. இதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் இன்று ஈடுபடுகின்றனர்.

  மேலும் பல்வேறு தோழமை கட்சிகள் அதிமுக அலுவலகத்திற்கு வந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தருகின்றனர்.

  மேலும் படிக்க... நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதி வேட்பாளர்கள் இன்று அறிமுகம் - கொளத்தூரில் சீமான் போட்டி?  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: