ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் : அவைத் தலைவர் அறிவிப்பு

ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் : அவைத் தலைவர் அறிவிப்பு

அதிமுக

அதிமுக

அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்கிறோம். ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - கே.பி.முனுசாமி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று நடந்தது. பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வதுக்கு எதிராக அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். பொதுக்குழுவிற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை. பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பி.எஸ்-ஸை வெளியேறிக் கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அமைதியாக இருந்தார்.

  பொதுக்குழு உறுப்பினர்கள் துரோகி என முழக்கம் எழுப்பியதால் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் மேடையில் இருந்து கீழ் இறங்கினர். பொதுக்குழுவுக்கு வந்த இபிஎஸ்-க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் மேடை ஏறினர். மேடையில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு இருவரும் மரியாதை செய்து அமர்ந்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இடையே தமிழ் மகன் உசேனுக்கு நாற்காலி போடப்பட்டிருந்தது.

  அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேடையில் இடைமறித்து பேசிய சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்க கோரிக்கை வைத்தார். அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்கிறோம். ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேடையில் கே.பி.முனுசாமி ஆவேசமானார்.

  Also Read:  ஒற்றைத் தலைமை கோஷம்... ஆதரவு அலையில் எடப்பாடி... வெளியேறிய ஓபிஎஸ்.. பாட்டில் வீச்சு.. அடுத்த மாதம் மீண்டும் அதிமுக பொதுக்குழு

  பின்னர் பேசிய சி.வி.சண்முகம், இரட்டை தலைமையால் அதிமுக தீவிரமாக செயல்பட முடியவில்லை. வலிமையான, வீரியமான ஒற்றைத் தலைமை வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை நடப்பு பொதுக்குழுவிலே தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இதைத் தொடர்ந்து பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, Edappadi palanisamy, EPS, O Panneerselvam, OPS - EPS