மோடியுடன் செல்பி! ட்விட்டரில் பதிவிட்டு மகிழந்த ரவிந்திரநாத் குமார்

ரவீந்திரநாத் குமார்

 • Share this:
  பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க எம்.பி. ரவீந்திரநாத் குமார் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பாக வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் எம்.பி. ரவீந்திரநாத் குமார். இவர் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் லோக்சபா அதிமுக குழுத் தலைவராக ரவீந்திரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் முதல் முறை தேர்வான எம்.பி மக்களவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை.

  இவர் லோக்சபாவில் அதிமுக குழுத் தலைவராக சென்ற நாள் முதல் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தபோது, பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனை ஆதரித்தவர் ரவீந்திரநாத் குமார்.

  இதனிடைய இவர் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  Also see:

  Published by:Sankaravadivoo G
  First published: