ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கனிமொழியை பாராட்டிப் பேசிய அதிமுக எம்.பி.

கனிமொழியை பாராட்டிப் பேசிய அதிமுக எம்.பி.

நவநீதகிருஷ்ணன்

நவநீதகிருஷ்ணன்

Kanimozhi : நாடாளுமன்றத்தில் எப்படி பேச வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தவர் கனிமொழி தான் என நவநீதகிருஷ்ணன் கூறினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாடாளுமன்றத்தில் எப்படி பேச வேண்டும் என தனக்கு கற்றுக்கொடுத்தவர் திமுக எம்.பி. கனிமொழி என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் பேசிய ருசிகரம் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர்.

  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் பேசும்போது, நாடாளுமன்றத்தில் எப்படி நிகழ்வுகள் நடைபெறும் என்றும், நாடாளுமன்றத்தில் எப்படி பேச வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தவர் கனிமொழி தான் என குறிப்பிட்டார்.

  Must Read : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்.... சனிக்கிழமையும் தாக்கல் செய்யலாம்

  திமுக எம்பி கனிமொழியை அதிமுக எம்.பி. பாராட்டிப் பேசியது விருந்தினர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

  Published by:Suresh V
  First published:

  Tags: AIADMK, Kanimozhi, Parliament