இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்... எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார்?

அஇஅதிமுக அலுவலகம்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கட்சியின் கொறடாவை முடிவு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

  • Share this:
    சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 12 மணிக்கு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டையுடன் எம்எல்ஏக்கள் பங்கேற்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகிகள், தொண்டர்கள் வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின், துணைத் தலைவர் பதவி தனக்கு வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டதாக தெரிகிறது. அதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மேலும் படிக்க...சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எம்எல்ஏக்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மிக்க கொறடா பதவி மூத்த உறுப்பினர் யாருக்காவது வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, எதிர்க்கட்சித் தலைவர் தேர்வின்போது ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த கூட்டத்திலும் அது எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published: