ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை!

இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை!

எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகிய நான்கு எம்எல்ஏக்கள் தனி குழுவாக செயல்பட்டுவருகிறார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்காத பட்சத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கலாமா என்பது குறித்து அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

  தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. இதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் எம்.எல்.ஏ,க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

  ஏற்கனவே எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்றும் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து சபாநாயகரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. என்பதால் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கலாமா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

  இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கொள்ளை... இதுதான் காரணமா?

  அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகிய நான்கு எம்எல்ஏக்கள் தனி குழுவாக செயல்பட்டுவருகிறார்கள். சபாநாயர் அப்பாவு எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர்செல்வத்தை அங்கீகரிக்கிறாரா அல்லது எடப்பாடி தரப்பின் படி உதயகுமாரை ஏற்கிறாரா என்ற சஸ்பென்ஸ் தற்போது நிலவி வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: AIADMK, Edappadi Palanisami, O Panneerselvam