அமமுகவில் இணைந்தார் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன்

ராஜவர்மன்

அதிமுக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 • Share this:
  அதிமுக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் டிடிவி திகரனை சந்தித்ததுடன், அமமுகவில் இணைந்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் இந்த முடிவு எடுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  அமைச்சர் ரஜேந்திர பாலாஜியுடன் அவருக்கு மோதல் போக்கு இருந்ததால் அதிமுகவில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பவில்லை என்று கூறப்படுகின்றது.

  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், “சாத்தூர் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் இன்று அமமுகவில் இணைந்துள்ளோம். உழைப்பவர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பில்லை என்பதே வருத்தமாக உள்ளது. தொகுதியில் இருக்கும் 1 லட்சம் நபர்களை கூட விசாரிக்கலாம்.

  ராஜேந்திர பாலாஜியால்தான் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. ராஜேந்திர பாலாஜிக்காக கட்சியா அல்லது கட்சிக்கு ராஜேந்திரபாலாஜியா?. மீண்டும் தற்போது இருக்கும் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவாரா? முதல்வர், துணை முதல்வரை ஏமாற்றி வருகிறார் ராஜேந்திரபாலாஜி.

  வெற்றி வாய்ப்பிருக்கும் யாருக்கும் அதிமுகவில் வாய்ப்பு வழங்கவில்லை. தேர்தலுக்கு பின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முடிவு செய்யும் இடத்தில் இருப்பார். இரண்டாண்டு காலமாக நான் ஆற்றிய பணிகள் என் தொகுதி மக்களுக்கு தெரியும். மக்களின் ஆதரவோடு, நிர்வாகிகள் வேண்டுதலோடுதான் அமமுகவில் இணைந்துள்ளோம்.

  இது ஆரம்பம் மட்டுமே. சின்னம்மாவுக்கு செய்த துரோகத்திற்காக, மக்கள் அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். அனைத்து சமுதாய மக்களும் இருக்கும் இடம் சாத்தூர் தொகுதி. ராஜேந்திர பாலாஜி செய்ததை யாரும் மறக்கமாட்டார்கள். அவர் காசு, பணம், பதவி இருக்கும் திமிறில் பேசி வருகிறார்.

  வெயிட் அன் சீ. முதல்வர், துணை முதல்வருக்கு சாத்தூர் தொகுதியில் நடக்கும் பிரச்சனைகள் தெரியும். இனி அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்மை செய்தவர் சின்னம்மா. அவரால் பலர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக ஆகியுள்ளனர். சாத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்.

  Must Read : தமிழகத்தில் 118 தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகம் - தேர்தல் ஆணையம்

   

  சசிகலா அமைதியாக இல்லை. இந்த தேர்தல் முடிவிற்காக காத்திருக்கிறார்கள் நிரந்தரமாக அதிமுகவை சின்னம்மா மட்டுமே காப்பாற்றுவார். உண்மை உறங்கி கொண்டிருக்கிறது. பொய்கள் நடமாடி கொண்டிருக்கிறது” இவ்வாறு கூறினார்.
  Published by:Suresh V
  First published: