ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

Youtube Video

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஈரோடு மாவட்டத்தை திமுகவின் எஃகு கோட்டையாக மாற்ற பாடுபடுவேன் என சூளுரைத்தார்.

 • Share this:
  அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

  2011 ஆண்டு ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016-ல், பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.

  அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் சுயேச்சையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

  இந்நிலையில், இன்று தனது ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோருடன், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு மாவட்டத்தை திமுகவின் எஃகு கோட்டையாக மாற்ற பாடுபடுவேன் என சூளுரைத்தார்.

   

  இதேபோல், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரமும், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஒரு ஜாதி கட்சியாக மாறி விட்டதாக கடுமையாக சாடினார்.

  இதேபோல், தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: