ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்...

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்...

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் எம்.எல்.ஏ,க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்காதபட்சத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கலாமா என்பது குறித்து அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வருகிற திங்கள்கிழமை கூடுகிறது. இதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் எம்.எல்.ஏ,க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்றும் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Read More: ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொல்லப்பட்டதை அறிந்து நொறுங்கிப்போனேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

ஆனால், இதுகுறித்து சபாநாயகரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே, சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கலாமா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: ADMK, EPS