நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கண்ட படுதோல்வியை தொடர்ந்து,
சசிகலாவை மீண்டும்
அதிமுகவில் சேர்க்க வேண்டும் என அக்கட்சி தொண்டர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு ஓபிஎஸ் சகோதரர் ராஜா ஆதரவு தெரிவித்ததோடு, தனது ஆதரவாளர்களுடன் சசிகலாவையும் நேரில் சந்தித்து பேசியிருந்தார்.இதனால், அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், மகளிர் தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
Must Read : திமுகவைச் சேர்ந்த நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவர் பதவி விலகல் - விசிக ஏற்குமா?
தொடர்ந்து, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொள்வது போன்ற விவகாரங்கள் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் ஆலோசிக்க உள்ளனர். அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.