அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்!

மதுசூதனன்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.

 • Share this:
  உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மதுசூதனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதிமுகவில் அவைத்தலைவராக இருந்த மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனன், இதற்காகக் கடந்த காலங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்றே வந்துள்ளார்.

  இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி இரு அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதா அணியிலிருந்த மதுசூதனன் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக அமைச்சராகவும் ஆனார். மது சூதனுக்கு கைத்தறி துறை இலாகா வழங்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து வந்தவர் மதுசூதனன்.

  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மீண்டும் இரண்டாக பிரிந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்ற முதல் மூத்த உறுப்பினர் மதுசூதனன்.
  Published by:Esakki Raja
  First published: