முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஒற்றைப் பதவி கோரிக்கையை ஏற்கக்கூடாது- தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

ஒற்றைப் பதவி கோரிக்கையை ஏற்கக்கூடாது- தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் அதிமுகவில் எனக்கான அதிகாரம் தற்போது வரை தொடர்கிறது-தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கும் நிலையில் ' அதிகாரமிக்க ஒற்றைப் பதவிக்கு ' கோரிக்கை விடுக்கப்பட்டால் ஏற்கக் கூடாது என இந்திய  தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவின் சிறப்பு பொதுக்குழு சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஒழிக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், அதிமுகவின் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாகவும் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.

எனினும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தொடர்வதாக தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இந்நிலையில்,  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கொரியர் மூலமாக அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்ற முறையில் தனக்கு இருக்கும் அதிகாரம் தற்போதும் தொடருவதாகவும் ,  ஒற்றைப் பதவி அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் அல்லது பிற புதிய பதவியிடங்கள் அதிமுகவில் உருவாக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு  கடிதம் வழங்கப்பட்டால் அதை ஏற்க கூடாது எனவும் பன்னீர் செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இபிஎஸ்-ஐ விட ஒபிஎஸ் பதவி பெரியது.. காவல்துறையை தன்வசம் வைத்திருந்த முன்னாள் மாண்புமிகுவுக்கு தெரியாதா? - முரசொலி கேள்வி

மேலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் சட்டப்படி மட்டுமே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என கூறப்பட்ட நிலையில் அதை மீறும் வகையில் நேற்று வானகரத்தில் அதிமுக சிறப்பு பொதுக்குழு நடைபெற்றதாகவும் , அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என  மேல்முறையீட்டுக்கு செல்ல இருப்பதால் தற்பொழுது ஒருங்கிணைப்பாளர் ,  இணை ஒருங்கிணைப்பாளர் தவிர வேறு பதவியிடங்களை அதிமுகவில்  அனுமதிக்க கூடாது எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஓபிஎஸ் துரோகி.. யாருக்கும் அவர் நன்மை செய்ததில்லை - இபிஎஸ் சாடல்

அதேநேரம் சின்னத்தை முடக்குவது தொடர்பாகவோ அதிமுகவின் சின்னத்தை தான் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றோ பன்னீர்செல்வம் தரப்பில் தற்பொழுது அனுப்பப்பட்ட கடிதத்தில் எந்த கோரிக்கையும் முன் வைக்கப்படவில்லை.

First published:

Tags: ADMK, AIADMK, Election commission of India, OPS - EPS