முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக என்ன எடப்பாடி பழனிசாமி தாத்தா ஆரம்பித்த கட்சியா..? ஓ.பன்னீர்செல்வம் காட்டம்..!

அதிமுக என்ன எடப்பாடி பழனிசாமி தாத்தா ஆரம்பித்த கட்சியா..? ஓ.பன்னீர்செல்வம் காட்டம்..!

இபிஎஸ் - ஓபிஎஸ்

இபிஎஸ் - ஓபிஎஸ்

ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி எனவும் அவரது ஆணவத்தை அதிமுக தொண்டர்கள் அடக்குவார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனினும், தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “மக்களை நாடி செல்லும் நிலையில் உள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரை கொடுத்து 50 ஆண்டு காலம் அதிமுகவை காப்பாற்றியுள்ளார்கள். மக்களிடம் நிச்சயம் நியாயம் கேட்போம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றினோம், அதை ரத்து செய்ய யாருக்கும் உரிமை இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின் தான் எங்கள் தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள்” என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தான் திமுகவின் A-Z டீம் என்று குற்றம்சாட்டிய ஓபிஎஸ், “என்னையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என இபிஎஸ் கூறுகிறார். இது அவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா? சுற்றுப்பயணம் உறுதியாக விரைவில் தொடங்கும். மாவட்ட வாரியாக மக்களை சந்திப்போம். ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, அவர் ஆணவத்தை அதிமுக தொண்டர்கள் அடக்குவார்கள். மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம். இனி தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு சென்று பெறுவோம். கூடிய விரைவில் சசிகலாவையும் சந்திப்பேன்” என்று கூறினார்.

First published:

Tags: AIADMK, Edappadi Palaniswami, O Panneerselvam