வலிமை உள்ள எதிர்க்கட்சியாக தமிழகத்தில் அதிமுக செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வலிமை உள்ள எதிர்க்கட்சியாக தமிழகத்தில் அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுகவும், அதிமுகவும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் உள்ளது. பொதுமக்கள் அதிமுகவிற்கு அங்கீகாரம் அளித்து உள்ளனர்.
அதிமுகவை பொறுத்தவரை பொதுச்செயலாளர் என்றால் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தான். இதை தான் பொது குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது. பொதுக்குழு அங்கீகாரம் செய்த ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தான் தற்போது அதிமுகவில் வழி நடத்தி வருகின்றனர். தற்போது அறிவித்துள்ள உட்கட்சி தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
ஆரம்ப காலங்களில் இருந்து எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை பொதுக்குழு அங்கீகாரம் செய்த நபர்களைக் கொண்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் வாழ்த்து கடிதம் தலைமை கழகத்தில் இருந்து அனுப்பப்படும் வழக்கத்துக்கு மாறாக விதிகளுக்கு மாறாகவும் எந்த ஒரு அறிவிப்போ விதிமுறை மாற்றமோ அதிமுகவில் நடக்கவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம் கூட்டணியில் உள்ளவர்கள் வருவதும் வராததும் அந்ததந்த கட்சிகளின் விருப்பமாக உள்ளது, அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்போது தயாராக உள்ளது கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் தயாராக இருக்கிறது என்று தெரிவித்த அவர், சசிகலா அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பொதுக்குழுவில் எடுக்கும் முடிவே அதிகாரபூர்வமாக உள்ளது சிலர் பொதுச்செயலாளராக போட்டுக் கொண்டால், அவர்கள் கட்சிக்கொடி பயன்படுத்துவதால் அவர்கள் சட்டரீதியாக விஷயம் அதற்கான பணிகளை அதிமுக செய்து வருகிறது சசிகலா குறித்து மீடியாக்கள் மட்டுமே பெரிதாக எழுதியும் செய்திகள் ஒளிபரப்பியும் வருகிறீர்கள்.
அன்வர் ராஜாவின் நீக்கம் கட்சிக்குள் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மிகப்பெரிய எழுச்சியும் புத்துணர்ச்சியும் தற்போது அதிமுகவில் உள்ளது. உண்மையான அதிமுகவின் ரத்தம் ஓடும் எந்த ஒரு நபரும் அதிமுகவை விட்டு விலகிச் செல்ல மாட்டார்கள். அவ்வாறு விலகிச் செல்பவர்கள் எதற்கும் உதவாதவர்கள் என்றும், அதிமுகவின் தலைமை கழகத்தில் மகிழ்ச்சியாக விவாதிக்கிறோம் மகிழ்ச்சியாக திரும்பி வருகிறோம் மகிழ்ச்சி மட்டுமே நிலையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.