Home /News /tamil-nadu /

திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்..!

திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்..!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதி சென்றார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    அதிமுக ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பு வழங்கியது. தனது தீர்ப்பில், ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டமும், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டமும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வருகிறார்.

    அதிமுக விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பு வார்த்தை போர் நடத்தி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி திருப்பதி சென்று சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் திருமலை  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று சென்றார்.

    நேற்று மாலை திருப்பதி சென்றடைந்தவர் அங்குள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.  இரவு திருப்பதியில் தங்கிய நிலையில் இன்று காலை ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டார். 

    Published by:Salanraj R
    First published:

    Tags: AIADMK, EPS, Tirumala Tirupati

    அடுத்த செய்தி