தேமுதிகவினரை தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த அதிமுக தரப்பில் இருந்து, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் இன்று அழைப்பு விடுத்துள்ளனர். அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தேமுதிக செல்லுமா, உடன்பாடு எட்டப்படுமா என்ற கேள்வி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், இழுபறி நீடிக்கின்றது.
மேலும் படிக்க... 23 சீட் கொடுத்தால் மட்டுமே பேசலாம்... அ.தி.மு.கவுக்கு தே.மு.தி.க கிடுக்கிபிடி
இந்நிலையில், அதிமுகவின் அழைப்பை ஏற்று, பேச்சுவார்த்தைக்கு தேமுதிக செல்லுமா அல்லது நேற்றை தினம் புறக்கணித்ததை போல இன்றும் புறக்கணிக்க போகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில், தேமுதிக சார்பில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்திடம் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருகின்றது.
தங்கள் கட்சிக்கு, 23 இடங்களை ஒதுக்க வேண்டும் என, தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருதாகவும் ஆனால், 10 முதல் 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறப்படுவதாகவும் தகவல்கள் வெளியாயின. இதனால், உடன்பாடு ஏற்படாத நிலையில். நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை தேமுதிக புறக்கணித்தது.
இந்நிலையில், நேற்று தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் ‘நமது முதல்வர் விஜயகாந்த்’ என்று கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Must Read: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா தேமுதிக? எல்.கே. சுதீஷ் ஃபேஸ்புக் பதிவால் வெளியான தகவல் என்ன?
அதிமுக கூட்டணில் இடம்பெற்றுள்ள
பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக, தேமுதிகவுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.