ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஈழத்தமிழர் படுகொலைக்கு திமுகவும் காங்கிரஸும்தான் காரணம்: அதிமுக

ஈழத்தமிழர் படுகொலைக்கு திமுகவும் காங்கிரஸும்தான் காரணம்: அதிமுக

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஈழத் தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினரை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாலை பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. 

  டெல்லியில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் தங்களுக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளித்ததாக தெரிவித்தார்.

  இதையடுத்து, ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக-வே காரணம் என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கடந்த வாரத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்களை இன்று நடத்த முடிவுசெய்யப்பட்டது.

  இதன்படி, 32 மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், தேனியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்கின்றனர். கரூரில் நடைபெறும் கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொள்ள உள்ளார். இதேபோல, ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

  இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், எதிர்க்கட்சிகளைக் கண்டித்து, ஆட்சியில் உள்ள ஒரு கட்சி போராட்டம் நடத்துவது இதுவே முதல்முறை என்றும், இது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் திருநாவுக்கரசர் கூறினார்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: AIADMK, DMK, Eelam Tamils murder case, Former President of Sri Lanka Mahinda Rajapaksa, LTTE