அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தொடங்கியது - வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை

அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தொடங்கியது - வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை

அதிமுக அலுவலகம்

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தொடங்கியது.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த வார வெள்ளிக்கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தொகுதி பங்கீட்டு பணிகள் ஒருபுறம் நடந்து நேரத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் வேட்பாளர்கள் நேர்காணலையும் நடத்திவருகின்றன. அ.தி.மு.கவில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 3-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாள் மட்டும் 1,000-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

  இந்தநிலையில், நேற்று விருப்பமனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது. இந்தநிலையில், இன்று ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணி செயலாளர் பா. வளர்மதி, சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் ராஜ், மருத்துவ அணி செயலாளர் வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்தும், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும்.

  இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அதிமுக மாவட்ட செயலர்கள் உடன் தனிதனியாக அதிமுக ஆட்சிமன்ற குழு ஆலோசனை செய்ய உள்ளது. இந்த ஆலோசனையின்போது, வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும், அதிருப்தியில் இருப்பவர்களை சமாளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: