அதிமுக பொதுக்குழுவை இன்று நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுக்கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு மேடையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், “ஒரு தலைமையை அடையாளம் காடும் நிகழ்வு இது கடுமையான உழைப்பின் அடையாளம் யார்... கடமையான பண்பு கொண்டவர் யார், தடுமாறாத மனம் உறுதி கொண்டவர் யார்.. யார்.. யார்.. என்றால் அது எடப்பாடியார். அந்த ஒற்றை சொல்லிலே இத்தனைக்கு மொத்த உருவமாக இருந்து நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கார். உழைப்பால் உயர்ந்தவர். விடாமுயற்சியால் விண்ணை தொட்டவர்.
Also Read: அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..
புரட்சித்தலைவருக்கு பிறப்பிலே பல்வேறு சிறப்பு உண்டு. 5- 10 நிமிடத்தில் 100 தொண்டர்களை சந்தித்து மகிழ்ச்சிப்படுத்துபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என தெரிந்ததுண்டு. அதே 5 -10 நிமிடத்தில் 500 தொண்டர்களை சந்தித்து மகிழ்ச்சிபடுத்துகிற ஒரே தலைவர் அண்ணன் எடப்பாடியார் நம்மிடையே கிடைத்துள்ளார்.
இன்று ராமனாக அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்டும்போது லட்சுமணனை காணவில்லை என கலங்க வேண்டாம். இதோ ஒன்றரை கோடி தொண்டர்கள் லட்சுமணனாக நம்மிடத்திலே இருக்கிறார்கள். என்ன செய்வது கட்டபொம்மன் பிறந்த மண்ணிலே தான் எட்டப்பனும் பிறக்கிறான்” எனக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, ADMK members, Edappadi palanisamy, O Panneerselvam, OPS, OPS - EPS, R.B.Udhayakumar