Home /News /tamil-nadu /

"புரட்சி தலைமகன்” எடப்பாடி பழனிசாமி : ஓ.எஸ். மணியன் புகழாரம்..

"புரட்சி தலைமகன்” எடப்பாடி பழனிசாமி : ஓ.எஸ். மணியன் புகழாரம்..

ஓ.எஸ்.மணியன்

ஓ.எஸ்.மணியன்

ADMK General Council Meeting : விரைவில் பொதுச்செயலாளராக உருவெடுக்க இருக்கும் அண்ணன் புரட்சித் தலைமகன் எடப்பாடியாரை வணங்குகிறேன். - ஓ.எஸ்.மணியன்

    அதிமுக பொதுக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுக்கூட்டம் தொடங்கியது.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “ நம்மை எல்லாம் வளர்த்து ஆளாக்கி உருவாக்கிய புரட்சித் தலைவரையும், அம்மாவையும் வணங்குகிறேன். இந்த பொதுக்குழு சீர்மிகு பொதுக்குழு, சிறப்பு மிகு பொதுக்குழு. வரலாற்றில் நிரந்தரமாக பேசப்படும் சிறப்புமிக்க பொதுக்குழு. கழக வரலாற்றில் தலைவர்கள் பொதுச்செயலாளர்கள் ஆனார்கள்.தூய தொண்டன், தொண்டர்களின் குரலாக இடைக்கால பொதுச்செயலாளர் அவர்கள் விரைவில் நிரந்தர பொதுச்செயலாளராக உருவெடுக்க இருக்கும் அண்ணன் புரட்சித் தலைமகன் எடப்பாடியாரை வணங்குகிறேன். என்றார்.

    பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வணக்கத்தை கூறி பேசத் தொடங்கிய ஓ.எஸ்.மணியன், அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்ததுடன், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம். சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.

    Also Read: கட்டபொம்மன் பிறந்த மண்ணிலே தான் எட்டப்பனும் பிறக்கிறான்.. அதிமுக பொதுக்குழுவில் ஆர்.பி உதயகுமார் பேச்சு

    மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியிறுத்தல்.இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல். நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல் உள்ளிட்ட தீர்மானங்களை வாசித்தார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Edappadi palanisamy, OPS, OPS - EPS, Politics, Tamil News

    அடுத்த செய்தி