ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக குழப்பம் தீருமா? பொதுக்குழு வழக்கில் இன்று மீண்டும் விசாரணை.. விளக்கமளிக்கவுள்ள தேர்தல் ஆணையம்..!

அதிமுக குழப்பம் தீருமா? பொதுக்குழு வழக்கில் இன்று மீண்டும் விசாரணை.. விளக்கமளிக்கவுள்ள தேர்தல் ஆணையம்..!

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான வாதங்கள் ஏற்கனவே நடைபெற்றன.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 2 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தேர்தல் ஆணையத்தையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று இடையீட்டு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார். இதனால், இன்றைய வாதத்தின்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தைப் பெற அதிமுக நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: AIADMK, Edappadi palanisamy, O Panneerselvam