Home /News /tamil-nadu /

AIADMK : அதிமுகவில் இன்று என்ன நடந்தது..? அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

AIADMK : அதிமுகவில் இன்று என்ன நடந்தது..? அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

AIADMK : பொதுக்குழுவில் பேசிய ஓ.எஸ்.மணியன் விரைவில் நிரந்தர பொதுச்செயலாளராக உருவெடுக்க இருக்கும் அண்ணன் புரட்சித் தலைமகன் எடப்பாடியாரை வணங்குகிறேன் எனப் புதுபட்டம் வழங்கினார்.

    அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. இந்தப்பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதிமுகவில் இன்று என்ன தான் நடந்தது..? அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்
    அதிமுக பொதுக்குழுவை இன்று நடந்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது.
    அதிமுக அலுவலகம் அருகே காலை தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை களைத்தனர்.
    அதிமுக தலைமை அலுவலக கதவுகளை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். கல்வீச்சு மோதல் சம்பவத்திற்கு இடையே அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார் ஓபிஎஸ்.
    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    பொதுக்குழு கூட்டத்தில் 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்கவும், தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பதிலாக துணைப்பொதுச்செயலாளர் பதவி உருவாக்கம் செய்யப்படுகிறது. கே.பி.முனுசாமியை துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
    பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார் “ராமனாக அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்டும்போது லட்சுமணனை காணவில்லை என கலங்க வேண்டாம். இதோ ஒன்றரை கோடி தொண்டர்கள் லட்சுமணனாக நம்மிடத்திலே இருக்கிறார்கள். என்ன செய்வது கட்டபொம்மன் பிறந்த மண்ணிலே தான் எட்டப்பனும் பிறக்கிறான்” என்றார்.
    பொதுக்குழுவில் பேசிய ஓ.எஸ்.மணியன் விரைவில் நிரந்தர பொதுச்செயலாளராக உருவெடுக்க இருக்கும் அண்ணன் புரட்சித் தலைமகன் எடப்பாடியாரை வணங்குகிறேன் எனப் புதுபட்டம் வழங்கினார்.
    அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொதுக்குழு.பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டார்.
    அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், என்னை நீக்குவதற்கு பழனிசாமிக்கோ, முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை.எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நான் நீக்குகிறேன்” என்றார்,
    ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை காலையில் கைப்பற்றியதைத் தொடர்ந்து, காவல்துறை உள்ளே நுழைந்து எல்லோரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, AIADMK, Edappadi palanisamy, EPS, O Panneerselvam, OPS - EPS

    அடுத்த செய்தி