முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுக்குழு கூட்ட விவகாரம்: சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தேதி வெளியானது

அதிமுக பொதுக்குழு கூட்ட விவகாரம்: சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தேதி வெளியானது

சசிகலா

சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பெயரில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.

  • Last Updated :

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பெயரில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இதனிடையே, இந்த வழக்கு சிவில் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அரசியல் சூழல் காரணமாக இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் முறையிட்டதையடுத்து இந்த வழக்கு மார்ச் 15ம் தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக அரசியல் களம் பரபர்ப்படைந்துள்ள நிலையில், சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ற என்ற எதிர்ப்ர்ப்பு எழுந்துள்ள சூழலில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Must Read:  ‘சசிகலாவின் அரசியல் பிரவேசம் இன்னும் சில நாட்களில் அசுர வேகம் எடுக்கும்’ என தகவல்

top videos
    First published:

    Tags: ADMK, Sasikala, TTV Dhinakaran