அதிமுக பொதுக்குழு கூட்டம்- விரைவில் தேதி அறிவிப்பு

Youtube Video

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி குறித்தும் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் மூத்த நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் மற்றும் ஓபிஸ் ஆலோசனை நடத்தினர்.

 • Share this:
  2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. அதிமுக-வில் முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் உள்ளது.

  இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரவு 9 மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையின், தங்கமணி, சி.வி.சண்முகம் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  மேலும் படிக்க...அதிமுக-பாஜக... முதல்வர் வேட்பாளர் யார்?

  கூட்டத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது, அதற்கான தேதியை உறுதி செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்தாக தெரிகிறது. மேலும், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. வரும் 28 ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: