2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
அதன்படி, 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போடி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி சண்முகம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி சண்முகநாதன், மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் திருமதி தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Must Read: ஒரு கோடி பேருக்கு வேலை, இலவசக் கல்வி, இலவச மருத்துவம் - பல்வேறு திட்டங்களுடன் பா.ம.க தேர்தல் அறிக்கை வெளியீடு
3 ஆவது முறையாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
5 ஆவது முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.
7 ஆவது முறையாக சென்னை மாவட்டம் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் ஜெயகுமார் போட்டியிடுகிறார்.
இவற்றுள் 4 தென் மாவட்டங்களிலும், 2 வட மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளாகவும் உள்ளன.