சென்னை ராயப்பேட்டையிலுள்ள
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நாளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமைக்கழம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022 – திங்கட் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் - எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பெயரில்லாமல் தலைமைக்கழகம் எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுக.
முன்னதாக ஒற்றதை தலைமை விவகாரத்தில் எழுந்துள்ள உட்கட்சி மோதலை தொடர்ந்து, மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டு வருகிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் நடந்து முடிந்தது. கூட்டத்தில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்ததால், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தனர். இதனால், கூட்டத்தின் பாதியிலே ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் எழுந்துச்சென்றார்.
மேலும், அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, ஒற்றைத் தலைமையை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அந்த கூட்டத்திலே அறிவிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், நாளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் மதுரை, தேனி மாவட்டங்களில் தனது ஆதரவாளர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியானது.
இதனால் நாளை பெரியகுளத்தில் இருந்து தனது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் அவர் சென்னைக்கு திரும்ப உள்ளார்.
நாளை மதியம் மதுரையில் இருந்து விமான மார்க்கமாக சென்னைக்கு ஓ.பி.எஸ் பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.