• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை

ஓ பன்னீர் செல்வம் | எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

ஓ பன்னீர் செல்வம் | எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

சென்னையில் இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுக அமைச்சர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

    அடுத்த ஆண்டு மத்தியில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், பாஜக, அதிமுக இடையேயான கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், இரு கட்சிகளும் தங்கள் பலத்தை காட்ட வெவ்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே, பாஜகவின் வேல் யாத்திரையை ஆளும் அதிமுக அரசு முடக்க தடை விதிப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. சட்டத்திற்கு முன் எல்லோரும் ஒன்றுதான், இங்கு மத அரசியலை கொண்டு மக்களை பிளவுப்படுத்த முடியாது என்கிற ரீதியில் அதிமுக தரப்பும் பேசி வருகிறது.

    நாளை தமிழகத்திற்கு வருகை தரும் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா, தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதிமுக உடனான கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், கூட்டணி தலைவர்களையும் சந்திக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், அமித்ஷா வருகைக்கு முன்னர் இன்று அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு விடை காணப்பட்டு விட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த அக்கட்சி நிர்வாகிகளை அழைத்துள்ளது.

    மேலும் படிக்க.. Ajith | வலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜீத்..



    அதன்படி, இன்று மாலை 4.30 மணிக்கு அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் கூட்டணி குறித்தும் விவாதிக்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: