Home /News /tamil-nadu /

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    அதிமுகவிலிருந்து மூத்த தலைவர் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ள சூழலில், இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய விவாதம் நடைபெறும் எனக்கூறப்படுகிறது.

    11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவிலிருந்து உறுப்பினர் சோழவந்தான் மாணிக்கம், பாஜகவில் சேர்ந்த நிலையில், அவருக்கு பதிலாக மாற்று உறுப்பினரை சேர்ப்பது அல்லது வழிகாட்டுதல் குழுவை விரிவு படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான தீர்மானமும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர் ராஜா, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனக்கூறியதாகவும், அதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

    Must Read : ஒமிக்ரான் வைரஸ்: 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவித்த தமிழ்நாடு அரசு

    இந்நிலையில், அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Anwar raja, Edappadi Palaniswami, O Panneerselvam

    அடுத்த செய்தி