சிவகங்கையில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை...

Youtube Video

அதிமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மர்ம நபர்களால், கொடுரமாக வெட்டி கொலை செய்யபட்டுள்ளார் .

 • Share this:


  சிவகங்கையில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மர்ம நபர்களால் கொடுரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

  சிவகங்கையை அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் 58 வயதான கோபால். இவர் அதே கிராமத்தில் இரண்டு முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மருமகள் ஹேமலதா. தற்போது ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பில் உள்ளார்.

  சனிக்கிழமை மாலை வழக்கம்போல் அருகில் உள்ள தனது தோட்டத்திற்கு கோபால் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அங்கு கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாச்சேத்தி போலீசார் விசாரணையில் இறங்கினர். சம்பவ இடத்தில் தடயங்களை கைபற்றினர். பின்னர் உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த கொலையை செய்த மர்ம நபர்கள் யார்? அரசியல் கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: