திருவள்ளூர் அருகே தரமற்ற டீசல் நிரப்பியதாக தனியார் பெட்ரோல் பங்கில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாக்குவாதம் செய்ததை படம்பிடித்த செய்தியாளர்களை ஒருமையில் பேசி செல்போனை பிடிங்கிய முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கோ. ஹரி. செய்தியாளர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த பாண்டூர் பகுதியில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.ஹரியின் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.
இதனையடுத்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சென்னை சென்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மீண்டும் ஆந்திர மாநிலத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது பாண்டூர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பி உள்ளனர்,
பின்னர் தொடர்ந்து ஆந்திரா மாநிலம் குடும்பத்தினர் ஆந்திராவை நோக்கி சென்ற போது சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததை அறிந்த அவர்கள் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பியதில் கலப்படம் இருந்ததாகவும் அதனாலேயே காரின் முன்பகுதி எரிந்ததாகவும் கூறி பெட்ரோல் பங்கில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Also read... கிருஷ்ணகிரியில் வாகன விபத்து ஏற்படுத்தியவரை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.ஹரி, அங்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதை பார்த்து ஒருமையில் பேசி செய்தியாளரின் செல்போனை பறித்து சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை நான் யார் தெரியுமா? என்னோட பெட்ரோல் பங்கில் வீடியோ எடுக்க நீ யார்? என்று மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசியது செய்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முன்னாள் அதிமுக எம்.பி செய்தியாளர்களை மிரட்டும் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Petrol