அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது... பாலியல் வன்கொடுமை வழக்கில் தனிப்படை காவலர்கள் நடவடிக்கை...

Youtube Video

பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாகவும், 3 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் நடிகை சாந்தினி, மணிகண்டன் மீது புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க.. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்  இதில், கைதை தவிர்க்கும் வகையில் முன்ஜாமின் கேட்ட மணிகண்டனின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து இரு தனிப்படைகள் அமைத்து மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் மணிகண்டனை காவலர்கள் தேடி வந்தனர். மணிகண்டனின் ஓட்டுநர், உதவியாளரிடமும் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
  Published by:Vaijayanthi S
  First published: