எய்ம்ஸ்-க்கு உரிமை கொண்டாடும் பாஜக: அதிருப்தியில் அதிமுக!

ஜெயலலிதா முதலில் குரல் கொடுத்து, அவருக்கு பின்னால் வந்த அமைச்சர்கள், முதலமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: January 14, 2019, 11:36 AM IST
எய்ம்ஸ்-க்கு உரிமை கொண்டாடும் பாஜக: அதிருப்தியில் அதிமுக!
எய்ம்ஸ் மருத்துவமனை (கோப்புப் படம்)
Web Desk | news18
Updated: January 14, 2019, 11:36 AM IST
மதுரையில் 1,264 கோடி ரூபாயில் அமைய உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை திட்டத்திற்கு பாஜகவினர் அதிக அளவில் உரிமை கொண்டாடுவது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி மதுரையில் அதிநவீன மருத்துவ வசதிகளை கொண்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு (எய்ம்ஸ்) அடிக்கல் நாட்டவுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த மாபெரும் திட்டத்தை மதுரையில் தொடங்குவதன் மூலம் பாஜக அரசியல் ரீதியாக பலனை அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பாஜக தற்போது தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

ஸ்டெர்லைட் விவகாரம் மீத்தேன், பணமதிப்பிழப்பு போன்ற பல்வேறு திட்டங்களால் மக்களிடம் அவப் பெயரை சம்பாதித்துள்ள பாஜக, மதுரை AIIMS மூலம் அதை சரிப்படுத்த முடியும் என நம்பி முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டம் பிரதமர் மோடி மனது வைத்ததால்தான் சாத்தியமாயிற்று என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

ஆனால், ஒரு சிலர் மக்களின் நலனுக்காக கொண்டு வரப்படும் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

முதலில் குரல் கொடுத்தவர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதலில் குரல் கொடுத்து, அவருக்கு பின்னால் வந்த அமைச்சர்கள், முதலமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி இத்திட்டம் தற்போது இங்கு வந்துள்ள நிலையில் பாஜகவினர் உரிமை கோருவதை முழுவதுமாக எதிர்க்க முடியாமல் அதிமுகவினர் மௌனம் காத்து வருகின்றனர்.

கூடுதலாக 28 ஏக்கர் ஒதுக்கீடு: எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஏற்கெனவே 196.24 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக கூடுதலாக 28 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் பரப்புளவு 224.24 ஏக்கராக பெருகியுள்ளது.

எது எப்படியோ எய்ம்ஸ் மருத்துவமனை சீக்கிரமாக அமைந்தால் சரி என்பதே தென் மாவட்ட மக்களின் மனநிலையாக உள்ளது.

Also see... உங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்ன? (14-01-2019) 
First published: January 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...