முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டிசம்பர் 7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்

டிசம்பர் 7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கட்சியின் அடிப்படை தொண்டர்களே தேர்வு செய்வார்கள் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அதிமுக கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

இதற்கு ஏற்ப ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு, டிசம்பர் 7ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடக்கும். தேர்தலில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும். கட்சியின் மூத்த தலைவர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் அகியோர் தேர்தல் ஆணையர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் கிடையாது.. பொது இடங்களுக்கு செல்லவும் தடை

நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இனிமேல் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: AIADMK, Edappadi Palaniswami, O Panneerselvam, OPS - EPS