ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல்

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

டிசம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வேட்பு மனு தாக்கல் நாளை மாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. மனுக்கள் 5-ம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும் 6-ம் தேதி மாலை 4 மணிவரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

டிசம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவு டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழகத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகழக நிர்வாகிகள், பேரூராட்சி மற்றும் நகர வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுக் குழுவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவியையும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என சட்ட விதி 20 (அ) திருத்தியமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் மீண்டும் சட்டவிதி 20 (அ) மாற்றி அமைத்து, கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் இனி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் (Single Vote) ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யும் வண்ணம் சட்ட விதிகளை மாற்றி அமைத்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இரு பதவிக்கான தேர்தல் தேதியை அதிமுக தலைமை நேற்று அறிவித்துள்ளது.

Must Read : வலிமை உள்ள எதிர்க்கட்சியாக தமிழகத்தில் அதிமுக செயல்பட்டு வருகிறது: ஜெயக்குமார்

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் அதிமுக சட்ட திட்ட விதி 30 பிரிவு 2ன் படி, அதிமுக உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறைக்கேற்ப உட்கட்சி தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: AIADMK