எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு - அதிமுக கண்டனம்

அஇஅதிமுக அலுவலகம்

ஆதாரம் எதுவும் இன்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது.

 • Share this:
  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் “எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நல பணிகளில் முழு கவனம் செலுத்தாமல் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதோ என்ற ஐயப்பாடும் வருத்தமும் மனதில் எழுகின்றன.

  எஸ்.பி வேலுமணி அவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம்.

  Must Read : SP Velumani  எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அதிமுகவினர் போராட்டம்

  கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக எப்பொழுதும் தயாராகவே உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆனால், ஆதாரம் எதுவும் இன்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது. இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: