• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிரச்னையை திசைதிருப்ப முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் தவணை முறையில் சோதனை- அதிமுகவினர் சாடல்

பிரச்னையை திசைதிருப்ப முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் தவணை முறையில் சோதனை- அதிமுகவினர் சாடல்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பிரச்னைகளை திசை திருப்பவே முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடப்பதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு.

  • Share this:
    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது.

    அதிமுகவை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு  சொந்தமான 43 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. 2013- 2021 காலக்கட்டத்தில் வருமானத்தைவிட அதிகளவு சொத்து சேர்த்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜயபாஸ்கர் மனைவி பெயரில் 27.22 கோடிக்கு சொத்து சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் உதவியாளர் சீனிவாசன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

    Also Read: விஜயபாஸ்கர் மனைவி மகளுக்கு கொரோனா தொற்று.. முகக்கவசம் அணிந்து அதிகாரிகள் சோதனை

    சென்னை சேத்துப்பட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார், அவரது சகோதரி, மாமனார் ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவருடன் தொழில் செய்துவந்தவர்கள் குறித்தும் விவரங்களை சேகரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை என்ற தகவல் அறிந்ததும். அதிமுக தொண்டர்கள் விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு குவிந்தனர்.

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடந்து வருவதை அறிந்த தென்சென்னை அதிமுக  வடக்கு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அங்கே வந்தார். உள்ளே அனுமதிக்குமாறு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் கூறினார். போலீஸார் மறுக்கவும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    Also Read:  முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதாக சாடினார். நீட் பிரச்னை, கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்பதாக கூறினார்கள். இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுப்பதாக கூறினார்கள். இப்படி ஒவ்வொரு பிரச்னைகளும் எழும்போது அதனை திசைதிருப்பவே இன்ஸ்டால்மெண்ட் முறையில் ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலும் சோதனை செய்கின்றனர்.” என்றார்

    அதிமுகவை சேர்ந்த ஆர்.பி.உதயகுமார் இந்த சோதனை குறித்து பேசுகையில்  “விஜயபாஸ்கர் மீது நடத்தப்படும் சோதனை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் என நிரூபித்து காட்டுவார் ” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: