• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தொகுதி பங்கீட்டில் மல்லுக்கட்டும் அதிமுக கூட்டணி கட்சிகள்..!

தொகுதி பங்கீட்டில் மல்லுக்கட்டும் அதிமுக கூட்டணி கட்சிகள்..!

அதிமுக-பாமக-தேமுதிக

அதிமுக-பாமக-தேமுதிக

கள்ளக்குறிச்சி தொகுதியை தனது சகோதரருக்காக அந்த தொகுதியை அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்க, மறுபுறம் சாதி வாக்குகள் அதிகம் உள்ளதாக கூறி பாமகவும் வலியுறுத்த, விஜயகாந்த் வென்ற ரிஷிவந்தியம் தொகுதியை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சியை தங்களுக்கே ஒதுக்க வேண்டுமென தேமுதிகவும் போர்க்கொடி தூக்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அதிமுக கூட்டணியில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்தாலும், தொகுதி பங்கீடு பெரும் பிரச்னையாகவே உள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதுதான் அதிமுகவுக்கு கடும் நெருக்கடியாக உள்ளது.

    கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததால், அங்கு அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனது சகோதரருக்காக அந்த தொகுதியை அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்க, மறுபுறம் சாதி வாக்குகள் அதிகம் உள்ளதாக கூறி பாமகவும் வலியுறுத்த, விஜயகாந்த் வென்ற ரிஷிவந்தியம் தொகுதியை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சியை தங்களுக்கே ஒதுக்க வேண்டுமென தேமுதிகவும் போர்க்கொடி தூக்கியுள்ளது.

    அடுத்ததாக, முதலமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால் சேலத்தை அதிமுகவே தக்கவைக்க விரும்புகிறது. ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் எல்.கே.சுதீஷ் தோற்ற இதே தொகுதியை தேமுதிகவும் கேட்கிறது.

    கோவை தொகுதியை பொறுத்தவரை, பவர்புல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், முன்னாள் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமிக்கும் இடையே போட்டி நிலவுவதால், கோஷ்டி மோதலை சமாளிக்க, அந்த தொகுதியை பாஜக வசம் விட அதிமுக முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தவர்.

    இதேபோல், கடலூர் தொகுதியை அமைச்சர் எம்.சி.சம்பத் தனது மகனுக்காக முயற்சிக்க, சிட்டிங் எம்.பி., அருண்மொழித்தேவன் மீண்டும் இந்த தொகுதியை கேட்க, கோஷ்டி பூசலை தவிர்க்க இந்த தொகுதியையும் பாமகவுக்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

    தென்சென்னை தொகுதியை தற்போதைய சிட்டிங் எம்.பி-யும், மகனுமான ஜெயவர்தனுக்காக அமைச்சர் ஜெயக்குமார் கேட்கிறார். அதேசமயம், தமிழிசை இங்கு போட்டியிட விரும்பியதாகவும், ஆனால் கிடைக்கும் 5 தொகுதிகளிலும் சாதிவாரியாக வேட்பாளர்களை நிறுத்த தலைமை முடிவு செய்ததால், அந்த வாய்ப்பு கை நழுவி சென்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவடைவதால் இல.கணேசனும், கோவை கிடைக்காவிட்டால் சி.பி.ராதாகிருஷ்ணனும், சிவகங்கை கிடைக்காவிட்டால் ஹெச்.ராஜாவும் இந்த தொகுதியை குறிவைப்பதாக சொல்லப்படுகிறது

    தொடர்ந்து 2 முறை வென்ற திருச்சி தொகுதியை சிட்டிங் எம்.பியான பா.குமார் கேட்க, கடந்த 98, 99 தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதால் நடிகர் நெப்போலியனுக்காக அந்த தொகுதியை கேட்கிறது.

    பாஜக பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்ரீபெரும்பதூர் தொகுதியை, சாதி வாக்கை காரணம்காட்டி, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்திக்காக பாமகவும் கேட்கிறது. சென்னை மாநகராட்சி எல்லைகளை உள்ளடக்கிய இந்த தொகுதியை அதிமுகவும் விரும்புவதால், தொகுதி யாருக்கு என்பதில் போட்டி நிலவுகிறது.

    Also  Watch: பாமக விரும்பும் தொகுதியை கேட்கும் தேமுதிக… கூட்டணியில் இழுபறி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Anand Kumar
    First published: