அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், வளர்மதி, கே. பி அன்பழகன், கே.சி வீரமணி, வைகை செல்வன், பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகைச்செல்வன், “அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தது போல வரும் 11 ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் ஒற்றைத் தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும். பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் குறித்து தற்போது பதில் கூற இயலாது” என்றார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், “23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு, ஓபிஎஸ் கையெழுத்தோடு தான் அழைப்பு கொடுக்கப்பட்டது. தான் கையெழுத்தே போடவில்லை என்கிறாரா ஓபிஎஸ். பொதுக்குழுவை கூட்டுவதில் ஆட்சேபனை அல்ல என்று நீதிமன்றத்தில் கூட ஓபிஎஸ் தரப்பு கூறியது. உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு தான் உண்டு.
வைத்திலிங்கம் தேவையற்ற வார்த்தைகளை பேசியுள்ளார். பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுக்குழு கூட்டும் அதிகாரம் உள்ளது. அல்லது ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மனு அளித்தால், அடுத்த 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்ட வேண்டும் என்பது கழக விதி 19ல் உள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் கூட தேவையில்லை. அனுமதி பெற வேண்டும் என்பதும் விதியில் இல்லை. ஒப்புதல் பெற வேண்டும் என அவர்கள் கூறுவது தவறு என்றார்.
Also Read: தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் மனு
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைபடத்துடன் கூடிய அடையாள அட்டை கொடுக்கப்பட்டது. அடையாள அட்டை காண்பித்து, பதிவு செய்து தான் கூட்டத்தில் பங்கேற்றனர். கையெழுத்து பெறவில்லை எனக்கூறுவது தவறு.
நீதிமன்ற உத்தரவை மீறி பதிவு செய்யாமல் உள்ளே வந்தது வைத்திலிங்கம் தான். முறைப்படி பொதுக்குழு நடத்தியிருக்கிறோம், எந்த சட்ட விதிமீறலும் இல்லை.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அதிமுகவில் இப்போது இல்லை. 12.09.2017 அன்று செய்யப்பட்ட சட்டதிருத்தம் படி பதவி செல்லும் என ஓபிஎஸ் வாதம் செய்தால் என்றாலும் அது செல்லாது. அது இடைக்கால பதவி மட்டுமே. தேர்தல் அறிவித்தவுடன் அந்த பதவி காலாவதியாகிவிட்டது. நேற்றைய பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் பெறாததால் அந்த பதவிகள் விதிப்படி காலாவதியாகிவிட்டன. ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அது தான் சட்டம். அதை ஏற்றுக்கொள்வோம். அவர் பொறுப்புகளை அறிவித்தால், அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவார்.
பொதுக்குழு கூடி கழக அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் விதி. ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யலாம் என விதி இல்லை. தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை வழிமொழிகிறேன் என பன்னீர்செல்வமே மேடையில் சொன்னார்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, C.v.shanmugam, CV Shanmugam, Edappadi palanisamy, Jayakumar, O Panneerselvam, OPS, OPS - EPS, Tamil Nadu