ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.. ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.. ஓ.பன்னீர்செல்வம்

எம்.ஜி.ஆர் சிலைக்கு ஒபிஎஸ் மரியாதை

எம்.ஜி.ஆர் சிலைக்கு ஒபிஎஸ் மரியாதை

அதிமுக தொடர்பாக வழக்கில் தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பினரும் காரசாரமான வாதங்களை முன்வைத்த நிலையில், வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகர் ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “நான் சர்வாதிகாரி அல்ல. கழகம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது” என்று கூறினார்.

First published:

Tags: AIADMK, O Panneerselvam