அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனதில் அச்சம் இருந்தது. தீர்ப்பை நினைத்து நேற்று வரை கலங்கிப் போயிருந்தேன். இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. உதட்டில் இருந்த சிரிப்பு இருந்து உள்ளத்தில் இல்லை. இங்குள்ள அம்மா கோயிலில் பிரார்த்தனை செய்தேன். ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளை வணங்கினேன். திருமண நாளில் தீர்ப்பும் சாதகமாகவும் வர வேண்டும் என வேண்டிக் கொண்டேன்” என்று கூறினார்.
ஓபிஎஸ்-க்கு இருக்கும் கடைசி வாய்ப்பு... உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம்..!
ஜெயலலிதா, எம்ஜிஆர் என இரு தலைவர்களும் அருள் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்ட அவர், சக்தி மிக்க தெய்வ தலைவர்கள் கொடுத்த வர பிரசாதம் தீர்ப்பு இது எனவும், 1.5 கோடி தொண்டர்களை காக்கும் தீர்ப்பு இன்று வந்துள்ளது, இனிமேல் அதிமுக தொண்டர்கள் தலைமையில் தான் இயங்கும் என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, Edappadi Palaniswami